is-it-good-to-include-fish-in-the-diet(உணவில் மீனை சேர்த்து கொள்வது நல்லதா...?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 16 October 2021

is-it-good-to-include-fish-in-the-diet(உணவில் மீனை சேர்த்து கொள்வது நல்லதா...?)

Fish

உணவில் மீனை சேர்த்து கொள்வது நல்லதா...?


மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத் தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கிறது என்று 

விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது.

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாய் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைசெய்கிறது.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

No comments:

Post a Comment