வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!
வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் முடி உதிர்வதைத் தடுப்பதும் மட்டுமில்லாமல் பொடுகு பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.
வெந்தயத்தை இரவே ஊறவைக்கவும். மறுநாள் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். இதனை தலையில் தடவி பிறகு குளித்தால் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி முடி வலுவாக இருக்க உதவும்.
வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து அரைத்து தலையில் தடவினால் பொடுகு பிரச்னை இருக்காது. முடியும் பளபளப்பாக இருக்கும்.
வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது.
இருதய பிரச்னை, மூட்டுவலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.
இதனை தினமும் ஊற வைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ள பெண்களும் இதனை சாப்பிட்டு வந்தால் பிரச்னை நீங்கும்.
வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. கீரையில் போலிக் அமிலம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும். இதில் உள்ள அமினோ அமிலம்,
உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.
No comments:
Post a Comment