pepper-with-lots-of-medicinal-properties(ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள மிளகு !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 20 October 2021

pepper-with-lots-of-medicinal-properties(ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள மிளகு !!)

pepper

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள மிளகு !!


மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. காரத்தன்மை கொண்ட மிளகில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.


செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் மிளகு முக்கிய பங்காற்றுகின்றது.
 
சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிபடுபவர்களுக்கு பாலில் மிளகுப்பொடியினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகத் தீரும். வறட்டு இருமலுக்கு முட்டையுடன் கூடுதலாக மிளகு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பிரச்சினை தீர்ந்து போகும். 
 
மிளகானது தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் மிளகில் டீ போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம்.
 
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
 
குழந்தைகள் சாப்பிடும் உணவில் மிளகாய் பொடிக்கு பதிலாக மிளகினை சேர்த்துவந்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாக வளரும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட மிளகினை இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
 
மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும். 
 
முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.


No comments:

Post a Comment