சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!
சிறுநீரகப் பராமரிப்பு என்பது மிக முக்கியமானது. சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நமது தினசரி பழக்கங்கள் தெரிந்துகொளவது அவசியம்.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் சென்று மருந்துகளை வாங்கி உண்பது சிறுநீரகங்களை சேதப்படுத்தும். எனவே வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் காணப்படும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக பாஸ்பரஸ் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுநீரகங்கள் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் இந்த இரண்டு பழக்கங்கள் எப்போதுமே உடல் நலத்திற்கு தீங்கு தான். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோயின் அபாயம் இரண்டு மடங்காக இருக்கும்.
அதிக அளவு சர்க்கரை உட்கொள்ளவது உடல் பருமனுக்கு வழி வகுக்கும். மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு அபாயம் மற்றும் சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். எனவே வெள்ளை சர்க்கரை சேர்த்த ரொட்டி ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் 3-லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்களை தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment