benefits-of-zucchini)(துத்திக் கீரையின் பயன்கள்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 9 October 2021

benefits-of-zucchini)(துத்திக் கீரையின் பயன்கள்!)

  




துத்திக் கீரையின் பயன்கள்!


துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது.


ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப் பருத்து வெளிவருவதைத்தான் மூலநோய் என்கிறார்கள். மூலதாரம் சூடு ஏறி
மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில்
இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.
தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக்கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும்.ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம்கழிக்கும்போது அந்த
வாய்ப் பிளந்துகொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன. ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோருவகைகளாகப் பிரித்தார்கள்.

நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம்,மேக மூலம், பௌத்திர மூலம்,
கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரகமூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம்
மற்றும் கவ்வு மூலம். இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச்சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல்
மூலநோய் குணமாகும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் நிவாரணம் அடையலாம்.

No comments:

Post a Comment