lemon-kills-infection(நோய்த்தொற்றை அழிக்கும் எலுமிச்சை) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

lemon-kills-infection(நோய்த்தொற்றை அழிக்கும் எலுமிச்சை)

lemon





நோய்த்தொற்றை அழிக்கும் எலுமிச்சை

எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது. எலுமிச்சையின் நறுமணம் சுவாத்துடன் உள்ளே செல்வதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று மேலும் அதிகரிக்காமல் பாதுகாப்பாக வைக்கின்றது.

எலுமிச்சை பழத்தின் நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.

நினைவுத்திறன் அதிகரிப்பதோடு மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. எலுமிச்சை, நோய்த்தொற்றுக்களை அழிக்கும்
தன்மைக் கொண்டது. இதை படுக்கை அறையில் வைப்பதால், கிருமிகள் அழிகிறது.

கோடையில் உடலின் வெப்பம் அதிகரிப்பதால், அதிகம் வேர்க்கும். அதிக வேர்வையில் கிருமிகள் வளர்வதால், வேர்வை நாற்றம் மற்றும் தோல் அரிப்பு ஏற்படும், வேர்க்குரு தோன்றும், இவற்றை தவிர்க்க, எலுமிச்சை சாறுடன், சோற்றுக் கற்றாழை எண்ணெய்யை கலந்து தோலில் பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.
குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் உடல் குளிர்ச்சி ஆவதுடன், தோல் நோயும் ஏற்படாது.

எலுமிச்சை பழத்தின் நீரை பருகினால், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வைத்து முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், முழுமையாக சுத்தத்தை தருகிறது. மேலும், கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.

No comments:

Post a Comment