the-nutrients-and-amazing-benefits-of-snake-gourd(புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 12 November 2021

the-nutrients-and-amazing-benefits-of-snake-gourd(புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும் !!)

Snake Gourd

புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும் !!

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. படபடப்பு உணர்வு குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். 
 
மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும். செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.
 
சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும். அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
 
குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.  இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

No comments:

Post a Comment