கல்லீரல் வீக்கத்தைக் கரைக்கும் பப்பாளி!
இதுக்கு முன்ன சிறுநீரகக் கல் பத்தியும் அதுக்கான கை எவத்தியத்தையும் இந்தப் பாட்டி விலாவாரியா சொல்லியிருந்தேன். இப்போ கல்லடைப்பு, கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கத்தால பாதிக்கப்படறவங்களுக்கு சில வைத்தியம் சொல்றேன்... கேட்டுக்கோங்க!அமுக்கிராங்கிழங்கு குரணம் அரை ஸ்பூன் எடுத்து, தேன்லந்து காலை நேரத்துல் சாப்பிட்டு வந்தா. இந்தக் கோளாறெல்லாம் காணாமப் போயிரும்.
கீழாதெல்லி, கரிசலாங்கண்ணி ரெண்டையும் சம அளவு
எடுத்து அரைச்சி, அதுவ நெல்லிக்காய் அளவு எடுத்து, பசும்பால்ல
கலந்து சாப்பிட்டு வந்தா. கல்லடைப்பு, கல்லீரல் வீக்கமெல்லாம்
சரியாயிரும்.
கோவை இஸை 100 கிராம், சீரகம் 20 கிராம், பின்ன வெங்காயம்3. இது மூணையும் ஒண்ணா சேர்த்து இடிச்சி, சாறு பிழிஞ்சுக்கோங்க. இதக் காலைல, சாயங்காலம் வெறும் வயித்துல சாப்பிட்டு வந்தாலும் கல்லடைப்பு தோயெல்லாம் சரியாயிரும். இதைச் சாப்பிடும்போது பேதியாகும். அதுக்காக பயப்படத் தேவையில்ல. இதை மூணு நாள் குடிச்சுட்டு, மூணு நாள் இடைவெளி விட்டு திரும்ப மூணு நான் குடிக்கணும், குணம் தெரியற வரை இதேமாதிரி இடைவெளி விட்டு விட்டுக் குடிக்கணும்.
கொடிகள்ளியை எடுத்து தீயில் வதக்கி சாறு பிழிஞ்சி ஒரு ஸ்பூன் எடுக்கணும் அதோட விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சோத்து காலைல வெறும் வயித்துல சாப்பிடனும். இதச் சாப்பிடும்போதும் பேதியாகும். கவலைப்படக் கூடாது. மூணு நாள் சாப்பிட்டு, மூணு நாள் இடைவெளி விட்டு நோய் தீகுற வரை குடிக்கணும்,
அடுத்தாப்புல நாஞ்சொல்லப்போற விஷயததைக் கேட்கவே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, வைத்தியம்னு
வத்துட்டா அருவருப்பெல்லாம் படக்கூடாது... ஆமா! அதாவது. பசுமாட்டு சிறுநீர் ஒரு பாலாடை அளவு, நொச்சிச்சாறு ஒரு பாலாடை அளவு எடுத்து ரெண்டையும் கலந்து தெனமும் காலையில் சாப்பிட்டு வந்தீங்களா... கல்லடைப்பாவது, கல்லீரல் வீக்கமாவது... எல்லாம் காணாமப் போயிரும். இதைச் சாப்பிடும்போது புனி, காரம், மாமிசம் சேர்க்கக் கூடாது.
இப்ப ஒரு சாதாரண வைத்தியமும் சொல்றேன். கேட்டுக்கோங்க திளமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தீங்களாலும் இந்தக் கல்லீரல் கல்லடைப்பு எல்லாம் சரியாயிரும். வீக்கம், மண்ணீரல் வீக்கம்,
No comments:
Post a Comment