நமக்குத் தெரியாமல் உள்ளுக்குள் அதிக அளவில் சர்க்கரை கொண்ட 10 உணவுகள் இவைதான்... இனி சாப்பிடாதீங்க...
உலகம் முழுவதும் அதிக மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு சர்க்கரை முக்கிய காரணமாக உள்ளது. அதிகப்படியான அளவில் சர்க்கரை எடுத்துக்கொள்வது உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இதனால் உடல் பருமன், இதய நோய்கள், டைப் 2 வகை நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிற மோசமான நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உடலில் அதிக சர்க்கரை என்பது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நீங்கள் உங்கள் உடல் சர்க்கரை அளவை குறைக்க பிஸ்கட்கள், கேக்குகள் போன்ற அதிகப்படியான இனிப்புகள் கொண்ட உணவுகளை தவிர்க்கலாம்.
இங்கு நிறைய பேர் அதிக சர்க்கரை சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலே சர்க்கரை உணவுகளை உண்டு வருகிறோம். பல உணவுகளில் அதிகமான அளவில் சர்க்கரை உள்ளன. ஆனால் அது நமக்கு தெரிவதில்லை. மேலும் இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் ஆரோக்கியமற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே நாம் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்போதுதான் அதை நாம் தவிர்க்க முடியும்.
காலை உணவு தானியங்கள்
நம்மில் பலர் காலை உணவாக தானியங்களை எடுத்துக்கொள்கிறோம். ஏனெனில் தானியங்களை எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்க முடியும். ஆனால் சோளம் போன்ற உணவுகள் காலை உணவிற்கு உகந்ததாக இருப்பதில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் இந்த தானியங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க கூடும். அதற்காக அனைத்து தானியங்களும் தீங்கிழைக்க கூடியவை என நாம் கூறிவிட முடியாது. தானியங்கள் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. எனவே தினமும் சர்க்கரை குறைவாக உள்ள தானியங்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. செரிமான சக்தியை மேம்படுத்தக்கூடியது. ஆனால் அனைத்து வகையான தயிரும் உடலுக்கு நன்மை பயப்பதில்லை. குறைந்த கொழுப்புள்ள தயிரில் அதிகமான அளவில் சர்க்கரை உள்ளது. அதில் உள்ள சர்க்கரையின் அளவானது உங்களை அதிர்ச்சியடைய செய்ய கூடும். ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிரில் 45 கிராம் சர்க்கரை உள்ளது.
No comments:
Post a Comment