ஆவாரம்பூ மருத்துவம்
சரும மாற்றம் நீங்க, பொன்னிறமாக: ஆவாரம்பூவை
உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். சிலர் உடம்பில் உப்புப் பொரித்தாற்போல் இருக்கும். தோவில் வறட்சி இருக்கும். வேர்க்கும்போது கற்றாழை மணம் வீசும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். இவற்றையெல்லாம் ஆவாரம்பூ உண்டால் தீர்க்கலாம்.
மர்ம உறுப்படிகளில் எரிச்சல்: ஆண், பெண் மர்ம உறுப்புகளில் தொல்லையான எரிச்சலா? ஆவாரம்பூவைக் கொண்டு சர்பத் செய்து பருகினால் இந்த எரிச்சல் அடங்கும். வட இந்தியாவில் பெரும்பாடு பிணி கண்ட மகளிர் இதனை யோனிக்குள் செலுத்தி நலம் பெறுகின்றனர்.
உறக்கத்தில் விந்து: வெளிப்படும் பிரச்சனையை நீக்க ஆவாரம்பூ சர்பத்தைப் பருகி வருக அல்லது சமைத்து உண்க.
உடல் நமைச்சலுக்கு: ஆவாரம்பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து நமைச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், நமைச்சல் நீங்கிவிடும்.
கண்ணோய்க்கு: ஆவாரம்பூவை வதக்கி படுக்கும் முன்
விழுங்குக. மதியம் அதே அளவு சுக்கை விழுங்குக. மாலை அதே அளவு கடுக்காய்த் துண்டை மென்று தின்று விடுக. மூவேளையும் விழுங்கிய பின் நீர் அருந்தலாம். உணவுக்கு முன் உண்ணுதல் நலம். தொடர்ந்து 29 நாட்கள் உண்க. 3 நாள் விடுக. மறுபடி 21 நாட்கள் உண்க. 40 நாள் இவ்விதம் சாப்பிடுவோர்க்கு எந்நோயும் அணுகாது. தேகம் உறுதியாகும்..
No comments:
Post a Comment