mutton meat ஆட்டிறைச்சி மருத்துவம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 24 July 2021

mutton meat ஆட்டிறைச்சி மருத்துவம்

ஆட்டிறைச்சி மருத்துவம்



மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு, பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரணத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.

ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான பிணிளை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும்; கபால பிணிகளைப் போக்கும். ஆட்டின் கண்: கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.

ஆட்டின் மார்பு: கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.

ஆட்டின் இதயம்: தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும். ஆட்டின் நாக்கு: சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை

தந்து பளபளப்பாக்கும். ஆட்டின் முளை: கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

ஆட்டின் நுரையீரல்: உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தகும். ஆட்டுக் கொழுப்பு: இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
ஆப்பிளில் உள்ள பாஸ்பர சத்து மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும், மூளைக்கோளாறு உள்ளவர்களுக்கு இது மாமருந்து, வாத நோய்க்கும் அரு மருந்து.

நரம்புத் தளர்ச்சி, உறக்கம் வராமை, தூக்கத்தில் புலம்பல், நடத்தல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்குக் காலை, மாலை ஓர் ஆப்பிள் வீதம் சாறு பிழிந்து கொடுத்தால் குணம் தெரியும்,

மன உழைப்பாளர்கட்கு ஆப்பிள் சாறு களைப்பு நீக்கி, புதுத் தென்பும் மன வலிவும் தருவதுடன், இதயமும் நரம்பு மண்டலமும் புது ஆற்றல் பெறச் செய்யும்.

No comments:

Post a Comment