FACE CARE மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 26 July 2021

FACE CARE மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

சன்ஸ்க்ரீன் அவசியம் தேவை
தற்போதைய காலங்களில் பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். ஒரு சிறிதளவு மேக்கப் இல்லாமல் கூட வீட்டை விட்டு வெளியில் செல்ல தயங்குகின்றனர். அந்த அளவிற்கு அழகின் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. உதட்டிற்கு லிப்ஸ்டிக், கண்களுக்கு காஜல் போன்ற அடிப்படை மேக்கப் பொருட்களை தங்கள் கைப்பையில் பலரும் வைத்திருப்பதையே நம்மால் காண முடிகிறது.

உங்கள் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் செயல்பாட்டில் அடிப்படை சரும பராமரிப்பு செயல்பாடுகளை மறக்கக் கூடாது. வெளியில் செல்வதற்கு 15 நிமிடம் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம்.

உங்கள் முகம் சோர்வாக இருப்பதாக கருதினால் மிதமான அளவு டிண்ட் மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்துங்கள். பெரிய பெரிய விழாக்களின் போது உயர்ந்த அளவு பவுண்டேஷன் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுங்கள். இதனை தினமும் பின்பற்றுவதால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் தூய்மை அடைகிறது. இதனால் உங்கள் சருமமும் பளபளப்பாக மாறுகிறது.


No comments:

Post a Comment