கண் மருத்துவம்
உடல் நலத்தையும், நலமின்மையையும் கண்களை உற்றுப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பூதக் கண்ணாடியைக் கண் அருகில் வைத்துப் பரிசோதிக்கவும். கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போன்று பிரித்துப் பார்க்கவும். உடலின் பொது நிலையைக் கண்டறிய இம்முறை உதவும்.
கண்ணீரில் இரண்டு வகை கிருமிநாசினி சக்தியுள்ள பொருட்கள் உள்ளன. அவை: லைசோசைம், பையோடின்.
சுமார் ஒரு தேக்கரண்டி கண்ணீரை 1 லிட்டர் தண்ணீரில் கலந்தால் அது மிகச் சிறந்த மூட்டைப்பூச்சி மருந்தாகப் பயன்படும். மூட்டைப்பூச்சியால் தொல்லைப்படுபவர்கள் கண்ணீர் கலந்த தண்ணீரை மூட்டைப்பூச்சி புகுந்துள்ள இடங்களிலும் தெளிக்கவும்.
கடையில் விற்கும் கிருமிநாசினிகள் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் வலுவிழந்துவிடும். கண்ணீரின் நோய் எதிர்ப்பு கண் உள்ளவரை குறைவதில்லை.
அல்சரையும், கட்டிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கண்ணீருக்கு உண்டு.
மனம் வருந்தி அழுது கண்ணீர் விட வேண்டாம். வாய் விட்டு நன்கு சிரித்தாலும் கண்ணீர் வரும். கண்கள் சுத்தமாகிப் பிரகாசிக்கும். சிரித்துக் கண்ணீர் விட்டு கண் நோய்களை, மன நோய்களை விரட்டுங்கள்.
அழுகை வரும்போது அடக்காதீர்கள். நன்கு அழுதுவிடுங்கள். அடக்கினால் மனநோய் வரும். நரம்புக்கோளாறு உள்ளவர்கள் அழ முடியாதவர்கள். வாயுத்தொல்லை, ஆஸ்துமா, அல்சர் இவை கண்ணீர் வறட்சி காரணமாக ஏற்படக்கூடும்.
No comments:
Post a Comment