நெல்லிக்காய்: தாவர இயல் பெயர்: Phyllanthus emblicn
குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லி ஆகும்.
இது மிகச் சிறந்த ஈரல் மருந்தாகும். நுரையீரல் சார்ந்த காச நோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. வைட்டமின் C சத்து வரும் ஸ்கர்வி நோயை குணப்படுத்தும். உடலில் எதிர்ப்புச் சக்தியை' நிலைப்படுத்தி முதுமையைத் தடுத்து, இளமையாக இருக்க வழி வால் வகுக்கும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செரிமானத்தைத் தூண்டும். சிறுநீர் பெருக்கும். சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் தைலம் தலையில் தேய்த்துத் தலை முழுகி வர கண்கள் பிரகாசிப்பதுடன், பொடுகு கட்டுப்பட்டு, முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
No comments:
Post a Comment