skincare tips: கருவளையம் முதல் பிரசவ தழும்புகள் வரை நீக்கும் மஞ்சள்... அதன் மகத்துவத்த தெரிஞ்சிக்கங்க...
மஞ்சள் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் சரும பாரமரிப்புக்கு பெயர் பெற்றது. மஞ்சளில் உள்ள குர்குமின் பல நன்மைகளை அதனுள் கொண்டுள்ளது. குர்குமின் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட ஒரு பயோ ஆக்டிவ் மூலம் ஆகும். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட மஞ்சள் உங்கள் சருமத்தை இயற்கையாகவே எவ்வாறு பளபளக்கச் செய்கிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலங்கள் உங்களின் சருமத்தை பளபளப்பாக்கி ஒளிரச் செய்யும். மஞ்சள் உங்கள் சருமத்தின் இயற்கையான பளபளப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த பொருள் ஆகும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன வேலை தான். சிறிதளவு யோகர்ட், தேன் மற்றும் மஞ்சள் தூள் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனை நன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின்பு சுத்தமான தண்ணீரில் உங்களின் முகத்தை கழுவுங்கள் போதும். உங்களின் சருமம் பொலிவுற்று பளபளக்கும்.
முகப்பரு என்பது ஒவ்வொரு தனி நபரும் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனால் முகப்பரு வடுக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட முகப்பரு வடுக்களைக் குறைக்க உதவும் அதிசயப் பொருள் மஞ்சள் மட்டுமே. மஞ்சளில் உள்ள ஆண்டி செப்டிக் பண்புகள் பாக்டீரியா பரவலைத் தடுக்க உதவுகிறது. அதோடு முகப்பருவால் ஏற்படும் சிவந்து போதல் மற்றும் கறைகளைக் குறைக்கிறது.
முகப்பருவை குறைக்கும் பேஸ் மாஸ்க் : ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளில் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மட்டி, சில சொட்டு ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் போதும். உங்களை ஆட்டிப் படைக்கும் முகப்பரு உங்களை விட்டு ஓடி விடும். இதன் பேஸ் மாஸ்கை நீங்கள் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் கூட போதும்.
No comments:
Post a Comment