Mira Rajput Kapoor's 2 Ingredient Diy Glow Facepack In Tamil மீரா ராஜ்புத் கபூர் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள்தான் யூஸ் பண்றாங்களாம்... ஆனா எதோட கலந்து அப்ளை பண்றாங்க தெரியுமா - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 28 July 2021

Mira Rajput Kapoor's 2 Ingredient Diy Glow Facepack In Tamil மீரா ராஜ்புத் கபூர் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள்தான் யூஸ் பண்றாங்களாம்... ஆனா எதோட கலந்து அப்ளை பண்றாங்க தெரியுமா

மீரா ராஜ்புத் கபூர் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள்தான் யூஸ் பண்றாங்களாம்... ஆனா எதோட கலந்து அப்ளை பண்றாங்க தெரியுமா


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாகித் கபூர். அவரின் மனைவி மீரா ராஜ்புத் கபூர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருப்பார். அவர் தனது சரும பராமரிப்புக்கு இயற்கை வழிமுறையையே பின்பற்றி வருகிறார். இந்த இயற்கை பொருட்கள் உங்களின் சமையலறையிலே கூட இருக்கும். அதனை சரும பராமரிப்புக்கு என்று நீங்கள் பயன்படுத்தினால் போதும். அவை உங்கள் சருமத்துக்கு மிகுந்த பயன்களைத் தரும்.
மீரா ராஜ்புத் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சருமத்தை பளபளக்கச் செய்ய வீட்டிலே கிடைக்கும் 2 பொருட்களை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். இது உங்களின் சருமத்தை பிரகாசமாகவும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தையும் கொடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும், சரும பொலிவுக்கு உதவும் அந்த பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்பது குறித்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சரி வாங்க அந்த இயற்கை முறை பேஸ் பேக்கை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

எப்படி செய்வது ?

ஒரு செம்பு (கன்சா) பாத்திரத்தில் உங்களுக்குத் தேவையான கஸ்தூரி மஞ்சளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை செம்பு பாத்திரத்தில் செய்வது தான் மிகவும் நல்லது. ஏனெனில் செம்பு பாத்திரம் சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டது. இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இதனை உங்களின் முகத்தில் நன்றாகக் தடவி விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.



No comments:

Post a Comment