சருமத்துல இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் உங்களுக்கு இருக்கா... இதுக்கு உடனடி தீர்வு என்ன... இதோ 5 டிப்ஸ்
நீங்கள் அவரசமாக ஒரு இடத்துக்கு கிளம்புகிறீர், ஆனால் உங்களால் சரிவர மேக்கப் போட முடியவில்லை. அல்லது உங்களின் முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க முடியவில்லை என்று நீங்கள் கவலைபடுகிறீர்கள் எனில் இனி உங்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை. காலையில் நீங்கள் எழும்போது உங்களின் நெற்றி அல்லது கன்னப் பகுதிகளில் முகப்பரு உள்ளது. ஆனால், நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டும். இப்போது உங்கள் முகத்தில் உள்ள உங்களுக்கு கவலையை ஏற்படுத்தி விடும். இது போன்ற விஷயங்களை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய இன்ஸ்டன்ட் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.இரவு தூங்கும் போது இல்லாத முகப்பரு காலையில் சிலருக்கு இருக்கும். இதனை நீக்க நீங்கள், இயற்கையான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜெல்லை ஐஸ் கியூப் தட்டில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுங்கள். பல மணி நேரங்களுக்குப் பின் உறைந்த கற்றாழை ஐஸ் க்யூப்ஸை பருக்களின் மீது மெதுவாக தேயுங்கள். இந்த சிகிச்சையின் மூலம் நீங்கள் உடனடி முடிவுகளைக் காண்பீர்கள். முகத்தில் ஏற்படும் பருக்களை முழுமையாக அழிக்க ஒவ்வொரு நாளும் இதனைச் செய்யுங்கள்.
நகங்களை வளர்ப்போருக்கு ஏற்படும் பிரச்சனை நகங்கள் அடிக்கடி உடைந்து போவது தான். அப்படி உடைந்து போன நகங்களை சரி செய்ய மிகவும் சுலபமான வழி உள்ளது. ஒரு டிஷ்யூ பேப்பரின் சிறு துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உடைந்த நகத்தை வைத்து விட்டு அதன் மீது, நெய்ல் வண்ண நெயில்பாலிஷை தடவி உலர்த்து விடுங்கள். உலர்ந்தவுடன் உடைந்த நகமும், டிஷ்யூ பேப்பரும் சேர்ந்து இருக்கும். அதனை எடுத்து உங்களின் நகத்தின் மீது கவனமாக வைத்து விட்டு, பின்னர் நீங்கள் விரும்பும் நெயில்பாலிஷை போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களின் நகம் மீண்டும் புதியது போல நீளமாக இருக்கும்.
வழுக்கைத் தலையில் இருக்கும் புள்ளிகளை மறைக்க, நீங்கள் கண்ணின் இமைகளுக்கு பயன்படும் கலவையே போதும். அந்தக் கலவையை பிரெஷ் கொண்டு உங்களின் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது தலையில் நிறைந்த தலைமுடி இருப்பது போன்ற மாயையைக் கொடுக்கும். அவசரமாக நீங்கள் வெளியில் செல்லும் போது, இந்த ஹேக்கை பயன்படுத்தி வழுக்கை இடத்தை உடனடியாக கண்ணுக்கு தெரியாததாக மாற்றிக் கொள்ளுங்கள்.
கரும்புள்ளிகள் உங்களின் முக அழகை வேறுபடுத்திக் காட்டும். அதனை உடனடியாக மறைக்க வேண்டுமெனில், பேஸ்ட்டில் சிறிது சமையல் சோடாவை தெளித்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை பிரெஷ் கொண்டு, உங்கள் முகத்தில் கறைகள் உள்ள பகுதிகளில் தடவுங்கள். இதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் அல்லது கறைகளை உடனடியாக நீக்கலாம்.
No comments:
Post a Comment