இலந்தைப்பழ மருத்துவம்
இலந்தைப் பழத்தில் இருவகையுண்டல்லவா? உருவம் இரண்டானாலும் மருத்துவப் பண்புகளிலும், சத்துக்களிலும் இரண்டும் சிறந்தவையே,
இலந்தைப் பழத்தில் "க்ளூடாமிக்" அமிலம் உள்ளது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும். எனவே, மூளை உழைப்பு செய்வோர்க்கெல்லாம் இலந்தைப்பழம் சிறந்த நண்பன்.
ஆப்பிள் பழத்தி இல்லாத வைட்டமின் ஏ உயிர்ச்சத்து இலந்தையில் நிறைய காணப்படுகிறது. நிறைய சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி
இலந்தைப்பழம் சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, சீதளபேதி, கீல்வாயுப் பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், வேட்டை முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என்று நம் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
உங்கள் வியர்வை நாறுகிறதா? உள்ளங்கால், அக்குள், உள்ளங்கை போன்ற இடங்களில் இலந்தை இலைகளை நசுக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை வியர்வை வரும் இடங்களில் தடவிக் காய விடுக. கொஞ்ச நேரத்திற்குப் பின் கழுவுக. வியர்வை நாற்றம் அழிந்தொழியும்.
தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண்
இவற்றிற்கு இலந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொப்பளித்தால் பலன் தெரியும். முடி உதிர்கிறதா? சொட்டையாகிறதா? இலந்தை இலை சாற்றைத் தலைமயிரிலும், சொட்டை விழுந்த இடங்களிலும் தடவி
வருக. விளக்கேற்றினால் பண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.
அரிசியைச் சேமிக்கும் போது சிறிது உப்புத் தூளையும் கலந்து விட்டால் எத்தனை நாளாயினும் அது கெடாமல் புழு பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.
• சாமான்கள் மீது துருப்பிடித்திருந்தால் அதன் மீது உப்பைத் தேயுங்கள் அகன்று பளபளப்பு தோன்றும். தரை கழுவும் நீரில் உப்பு கலந்து கழுவினால் தரை
காய்ந்த பிறகு ஈக்கள் தரையில் மொய்க்கும் தொல்லையிராது.
No comments:
Post a Comment