நெய், வெண்ணெய், ஆலிவ் ஆயில் - மூன்றில் எடையை குறைக்க சிறந்தது எது?
பொதுவாக எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவில் கொழுப்புகளை சேர்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் உண்மையில் உடல் எடையை குறைக்க நல்ல கொழுப்பு உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் பார்க்கும் போது எடை குறைப்பில் நெய், வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இவற்றில் எது சிறந்தது. கீட்டோ டயட் இருப்பவர்களுக்கு இந்த மூன்றில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும்.
இந்திய உணவுகளில் நெய் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பொருட்களின் கொழுப்பு சங்கிலியும் சற்று வித்தியாசம் ஆனது. ஆலிவ் ஆயில் நீண்ட கொழுப்பு சங்கிலியையும், நெய் குறுகிய கொழுப்பு சங்கிலியையும், பட்டரில் கொழுப்பு சங்கிலியும் நீரும் காணப்படுகிறது. நெய்யின் உயர் வெப்பநிலை ஆலிவ் ஆயில் மற்றும் பட்டரை விட அதிகமாகும். எனவே தான் நெய்யை நீங்கள் அதிகமாக சூடுபடுத்தும் போது அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் அதன் புகை வெப்பநிலையை எட்டும் போது கெட்ட கொழுப்பாக மாற்றப்படுகிறது. எனவே இந்த மூன்றையும் நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்து உங்க எடை இழப்பு உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். சரி வாங்க இந்த மூன்றில் எது சிறந்தது எதைக் கொண்டு உங்க உடல் எடையை குறைக்க முடியும் என அறிவோம்.
சில வகையான கொழுப்புகள் நம்மை திருப்திகரமாக உணர வைக்க உதவுகிறது. மேலும் கொழுப்புகள் சில அத்தியாவசிய விட்டமின்கள் உறிஞ்ச உதவி செய்கிறது. விட்டமின் A, D மற்றும் E போன்ற விட்டமின்கள் உறிஞ்ச உதவுகிறது. இந்த கொழுப்புகளை நீங்கள் பட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் நெய் போன்றவற்றில் இருந்து பெற முடியும்.
No comments:
Post a Comment