கர்ப்பத்துக்கு தயாராகும் தம்பதியர் செய்ய வேண்டியது என்ன? செய்யகூடாதது என்ன? தெரிஞ்சுக்கலாமே!
கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பு கர்ப்பகால ஆரோக்கியம், உணவு, மருந்துகள், உடற்பயிற்சிகள், பிரசவம் மற்றும் குழந்தை வளர்ப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து மனதளவிலும் அச்சங்களை கொண்டிருக்கும் பெண்கள் பலர் உண்டு.
கருவுறுதலை எதிர்கொள்ளும் தம்பதியர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். கர்ப்பம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள குடும்ப பெரியவர்கள் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை செய்வதன் மூலம் உங்கள் கர்ப்பகாலமும் பேறுகாலமும் அதற்கு பிந்தைய காலமும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி நீங்கள் என்னென்ன விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
மகப்பேறு மருத்துவரிடம் முன்கூட்டிய பரிசோதனைகள் குறித்து ஆலோசியுங்கள். குறிப்பாக உங்கள் தனிப்பட்ட மருத்துவ வரலாறு, குடும்ப மருத்துவ வரலாறு, மருந்துகள் எடுக்கும் நிலை போன்றவற்றை குறித்து ஆலோசிக்க வேண்டும்.
அதோடு தம்பதியர் இருவரும் மருந்துகள் எடுக்கும் நிலை இருந்தால் அது குறித்தும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சில மருந்துகள் கர்ப்பத்தை பாதிக்கும் அவர்களுக்கு மருந்து மாற்றி கொடுக்கலாம்.
மருத்துவர் கர்ப்பத்துக்கு முந்தைய உணவு, உடற்பயிற்சி, எடை இழப்பு முறை, தடுப்பூசிகள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் (புகைப்பழக்கம்,மது அருந்துதல் , போதைப்பழக்கம் இருப்பின்) போன்றவை குறித்தும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
நீரிழிவு, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ நிலைகள் இருந்தால் சிறப்பு நிபுணரை பார்க்க வலியுறுத்துவார். இவையெல்லாம் கருவுறுதலுக்கு முன்பு கட்டுப்படுத்த வேண்டும். பெண்ணுக்கு இடுப்பு பரிசோதனை, பால்ஸ்மியர் பாலியல் பரவும் நோய்கள் அவசியமெனில் செய்வார்கள்.
No comments:
Post a Comment