ஆயுர்வேத முறைப்படி குடிநீரை ஆரோக்கியமாக சேமிப்பது எப்படி?
நீரின்றி அமையாது உலகு என்னும் குறளுக்கு ஏற்ப இந்த உலகமும் நமது உடலும் அதிகமான அளவு நீரால் உருவாகியுள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்பது ஒரு பெரும் கேள்வியாகவே உள்ளது. மக்கள் பலர் தினசரி சரியான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா? என்பதை அறிய வேண்டியது முக்கியமாகும். மேலும் குடிநீரை நாம் எதில் சேமித்து வைத்துள்ளோம் என்பதும் முக்கியமாகும். இப்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பிளாஸ்டிக்
கொள்கலனில் வைத்து அருந்தும் நீர் ஆரோக்கியமானதா?
ஆயுர்வேத முறையானது ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். உணவை போலவே தண்ணீரும் உடலால் ஜீரணிக்கப்பட வேண்டும் என அயுர்வேதம் கூறுகிறது. இது ஒரு மாற்று மருத்துவ முறையாக பார்க்கப்படுகிறது. மேலும் தண்ணீரை சரியாக சேமித்து பயன்படுத்துவதன் மூலம் நாம் உடலில் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அதற்கு முதலில் தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என நாம் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரை சில பழங்கால முறைகளை பயன்படுத்தி சேமிப்பதன் மூலம் நாம் நன்மையை பெறலாம்.
No comments:
Post a Comment