importance-and-benefits-of-vitamin-b1 வைட்டமின் பி1 நம் உடலுக்கு எவ்வளவு தேவை... என்னென்ன உணவுகளில் அதிகம் இருக்கிறது?... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 4 August 2021

importance-and-benefits-of-vitamin-b1 வைட்டமின் பி1 நம் உடலுக்கு எவ்வளவு தேவை... என்னென்ன உணவுகளில் அதிகம் இருக்கிறது?...

வைட்டமின் பி1 நம் உடலுக்கு எவ்வளவு தேவை... என்னென்ன உணவுகளில் அதிகம் இருக்கிறது?...


நம்மை உயிருடன் வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் பி 1 ஆகும். ஆனால், நம் உடலால் இந்த வைட்டமின் பி-1 ஐ உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவுகள் மற்றும் வைட்டமின் பி-1 சப்ளிமெண்ட்ஸ் மூலம் மட்டுமே அவை நமக்குக் கிடைக்கும். வைட்டமின் பி 1 உணவை ஆற்றலாக மாற்றவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், உயிரணுக்களுக்குள் ஆற்றலை கொண்டு செல்வது போன்ற சில முக்கிய உடல் செயல்பாடுகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இது நீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து. அதனால் இதனை உங்கள் உடல் நன்கு உறிஞ்சிவிடும். இப்படிபட்ட வைட்டமின் பி 1- ன் பங்கு மற்றும் அதன் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாங்க.
வைட்டமின் பி 1 உங்கள் உடலில் அசிடைல்கோலின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும். இது ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது ஒரு நரம்பியக் கடத்தியாக செயல்படுகிறது. உங்கள் தசைகளுக்கும், மூளைக்கும் இடையே செய்திகளை திறம்பட பரிமாறச் செய்ய வைட்டமின் பி 1 உதவுகிறது. இது உங்கள் மூட்டுகள் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் சிறந்த நரம்பியல் கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் பி 1 போதுமான அளவில் இருப்பது உங்கள் இதய தசைகளை எல்லா நேரத்திலும் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்கிறது. இது, தடையற்ற இதய செயல்பாட்டைக் குறிக்கிறது. மேலும், உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி 1 மிகவும் முக்கியம். வைட்டமின் பி 1 குறைபாடு இருப்பது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் சோம்பலுக்கு வழி வகுக்கும்.
வைட்டமின் பி 1 ஊட்டச்சத்து பற்றிய ஆராய்ச்சியில், வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வைட்டமின் பி 1- யில் உள்ளது. அதிகப்படியான ஆக்சிஜனேற்றத்தால் நம் உடலுக்குள் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்கள் அகற்றப்படும். இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உடலில் போதுமான அளவில் இருக்கும் போது அவை வயதான அறிகுறிகளுக்கு எதிராக போராட உதவும். வைட்டமின் பி 1 உயிரணு மீளுருவாக்கத்தை ஊக்குவிப்பதோடு, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், புள்ளிகள் போன்ற முதுமையால் ஏற்படும் அறிகுறிகளை மறைக்க உதவுகிறது.
உங்கள் உடலில் உள்ள வைட்டமின் பி 1, வயிற்றில் நிகழும் ஹைட்ரோ குளோரிக் அமில உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் உண்ணும் உணவை உடைக்கச் செய்ய ஹைட்ரோ குளோரிக் அமிலம் மிகவும் முக்கியமானது. இரைப்பைக் குழாய்க்குள் செல்வதற்கு முன் நாம் உண்ணும் உணவு முற்றிலும் உடைந்து போவது மிகவும் அவசியம். எனவே, உங்கள் அமைப்பில் வைட்டமின் பி 1 இருப்பது எப்போதும் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது. இது நம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸை உடைத்து அவற்றை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. மேலும், வைட்டமின் பி 1 எப்போதும் உங்களை உற்சாகமாக உணர வைக்கும்.

No comments:

Post a Comment