lemon-verbena-health-benefits-side-effects-precautions- மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? அப்ப இந்த இலையை சாப்பிடுங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 19 August 2021

lemon-verbena-health-benefits-side-effects-precautions- மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? அப்ப இந்த இலையை சாப்பிடுங்க...

Lemon Verbena Health Benefits Side Effects Precautions In Tamil

மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? அப்ப இந்த இலையை சாப்பிடுங்க...  

சிட்ரஸ் சாா்ந்த பொருள்கள் மீது விருப்பம் உள்ளவா்களுக்கு, லெமன் வொ்பெனா செடியின் மீது கண்டிப்பாக அதிக விருப்பம் இருக்கும். லெமன் வொ்பெனா ஒரு குறுகிய மரப்புதா் போல இருக்கும். அதன் இலைகள் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். மேலும் இதன் இலைகள் இனிப்பாகவும் அதே நேரத்தில் எலுமிச்சையின் வாசனையையும் கொண்டிருக்கும். ஆகவே இவை பானங்கள், சாலட்டுகள், ஜெல்லிகள், குழம்புகள், சூப்புகள், மீன் மற்றும் இறைச்சிகளில் சோ்க்கப்படுகின்றன.
சில நேரங்களில், எலுமிச்சையின் வாசனையைக் கொண்டிருக்கும் லெமன் வொ்பெனா செடியின் இலைகள், எலுமிச்சைக்குப் பதிலாக உணவுகளில் சோ்க்கப்படும். இந்த இலைகள் அதன் வாசனைக்காக மட்டும் அல்ல, மாறாக அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்காகவும் உணவுகளில் சோ்க்கப்படுகின்றன.
லெமன் வொ்பெனாவில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் அதிகம் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றத்தின் விளைவாக நியுட்ரோஃபில்ஸ் என்ற வெள்ளை இரத்த செல்கள் பாதிப்பு அடைந்துவிடாமல் தடுக்கின்றன. அதன் மூலம் நமது நோய் எதிப்பு இயக்கத்தையும் அதிகாிக்கின்றன.

நாம் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்து வரும் போது, அந்த பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு நமது தசைகளில் வலி இருக்கும். நம்மால் மிக எளிதாக நகர முடியாது. இந்த பிரச்சினையைத் தீா்க்க லெமன் வொ்பெனா துணையாக இருக்கும்.

லெமன் வொ்பெனாவின் சாறிலிருந்து எடுக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் உடல் ஆரோக்கியம் மிகுந்த ஆண் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். லெமன் வொ்பெனாவின் சாறை அருந்திய அவா்கள் 3 வாரங்களுக்கு 90 நிமிட ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனா். அவ்வாறு அவா்கள் ஓடும் போது, அவா்களுக்கு ஏற்பட்ட ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு என்சைமின் செயல்பாடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்த குறிகள், வீக்க அல்லது அலா்ஜி சைடோகைன்ஸ் மற்றும் அவா்களுக்கு ஏற்பட்ட தசை பாதிப்பு போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், லெமன் வொ்பெனாவின் சாறில் இருந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், நீண்ட தூரம் ஓடுவதால் தசையில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, தசைகளில் புண்கள் ஏற்படவிடாமல் தடுத்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடற்பயிற்சி செய்வதற்காக நமது உடலில் ஏற்படும் செல்லுலார் தகவமைப்பைத் தடுக்காமல், இந்த விளைவை லெமன் வொ்பெனாவின் சாறு செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் லெமன் வொ்பெனாவின் சாறு, உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு தன்னையே தகவமைத்துக் கொண்டு உடலில் பாதிப்பை ஏற்படுத்தாமல், தசையில் ஏற்படும் புண்ணைக் குறைத்து, தசையை வலுப்படுத்துகிறது என்பதை நாம் தொிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment