what-are-the-benefits-of-consuming-drumstick-flower-infusion- சோயாவில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

what-are-the-benefits-of-consuming-drumstick-flower-infusion- சோயாவில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!!

Soybeans

சோயாவில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்...!!


ஊட்டச்சத்து நிறைந்த சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.

சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சோயாவில் உள்ள புரோட்டீனானத ு எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. 
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. 
 
எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை,  குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
வாழ்நாள் முழுவதும் சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும்பங்கு வகிப்பது ஆரோக்கியமான இயற்கை  உணவுகளே. நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment