diet-and-workouts உணவும் உடற்பயிற்சியும் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 12 September 2021

diet-and-workouts உணவும் உடற்பயிற்சியும்

Femina

உணவும் உடற்பயிற்சியும்

ஷில்பா ஷெட்டி குந்தேராவின் பயிற்சியாளர் அவருக்கு அளித்த உணவு மற்றும் ஃபிட்னஸ் திட்டம் இதோ. இதை ஒரு எடுத்துக்காட்டாக வைத்து, உங்கள் உடல் வகை, எடை பொருத்து மாற்றிக்கொள்ளலாம்.  

தீவிர உழைப்பு
“ஷில்பாவின் உடல்வாகு எக்டோமார்ப் வகையைச்சேர்ந்த்து. அதாவது ஒல்லியான, வாகான உடல் வாகு. அதனால் தான் குழந்தை பெறுவதற்கு முன் அவர் ஒல்லியாக இருந்தார். ஆனால் தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதிக நடமாட்டம் இல்லாத்து அவரை எடை போட வைத்து, உறுதி மற்றும் பிட்னசை இழக்க வைத்த்தது. மேலும் அவருக்கு முழங்கால், கழுத்து மற்றும் கீழ் முதுகி வலி இருந்தது. எனவே அவரை ஒர்க் அவுட் செய்ய வைப்பது துவக்கத்தில் கடினமாக இருந்தது” என்கிறார் அவர். சன்னா, அவரது உடல் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கச்செய்ததோடு, தொடைப்பகுதி தசைகளை வலுவாக்கவும் செய்தார். அதே நேரத்தில் அடிப்படை ஒர்க் அவுட்டும் செய்ய வைத்தார். அவர் வாரத்தில் 2 நாட்கள் யோகா செய்த்தோடு, ஏரோபிக் பயிற்சியும் துவங்கினார். கார்டியோவையும் தவறாமல் செய்தார். மூன்று நாள் வலுப்பயிற்சி, மார்பு, தோள்கள் மற்றும் டிரைசெப் பகுதியில் முதல் நாள் கவனம் செலுத்தியது. இரண்டாம் நாள் முதுகு மற்றும் பைசெப் பகுதியிலும், 3 ம் நாள் கால்களிலும் கவனம் செலுத்தியது. அனிமல் புளோ ஒர்க் அவுட்(தவழுவது போன்ற நிலையிலான துடிப்பான பயிற்சி) மற்றும் தீவிர கண்டிஷனிங் ஒர்க் அவுட்டையும் ஷில்பா மேற்கொள்ள வைத்தார்.
உணவு
“குறைந்த மாவுச்சத்து உணவை தீவிரமாக கடைபிடித்தார்- காய்கறிகள், பழங்களுடன் புரத்த்தை சமன் செய்தார். நாள் ஒன்றுக்கு 5 அல்லது 6 முறை சிறிய அளவில் உணவு உட்கொண்டார். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு பழுப்பு அரிசி சாதம், ஒரு ரொட்டி, சப்ஜி, காய்கறி ரசம் அல்லது பழரசம் எடுத்துக்கொண்டார். 3 மாதங்களி இயற்கையான முறையில் 21 கி எடை குறைய வைத்தேன். திரையில் அவரை மற்றவர்கள் பார்த்து பழக்கப்பட்ட்தை விட சிறந்த வடிவத்தை நோக்கி அவரை உழைக்க வைத்தேன். சரியான வழிகாட்டுதல், ஈடுபாடு மற்றும் தியாகம் மூலம் எதுவும் சாத்தியம்”.

No comments:

Post a Comment