பாரம்பரிய உணவு
உள்ளூரிலேயே நிறைய ஆரோக்கிய உணவுகள் இருக்கின்றன என்கின்றனர் வல்லுனர்கள். இவற்றில் சில வெளிநாட்டு காய்கறிகளை விட ஊட்டச்சத்து மிக்கவை. அவை என்னென்ன என்று பட்டியலிடுகிறார் கயல்விழி அறிவாளன்.
நமது நெல்லிக்காயையை எடுத்துக்கொள்வோம். ஊறுகாய், பொறியல் அல்லது உப்பு கலந்து உட்கொள்ளப்படும் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட்கள் கொண்டுள்ளதால் கிரேன்பெரி போன்றவைக்கு மாற்றாக அமைகிறது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துவதாக ஆர்கானிக் ஸ்டோர் மற்றும் ரெஸ்டாரண்ட் ஹாப்பி, ஹெல்தி மீ இணை நிறுவனர் மற்றும் சி..இ.ஒ நமுகினி கூறுகிறார்.
மூன்று ஆண்டுகளாக நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதாகவும், ஒருமுறை கூட ஜலதோஷம் வந்ததில்லை என்கிறார்.
இது போன்ற இன்னொரு அற்புத உணவு தென்னிந்திய வீடுகளில் அதிகம் காணப்படும் முருங்கைகாய். சாம்பரில் பயன்படுத்தப்படும் முருங்கை மற்றும் அதன் இலைகள் அதிக ஆண்டிஆக்ஸிடெண்ட் கொண்டுள்ளதோடு, வைட்டமின் ஏ, பி காம்பிலக்ஸ் மற்றும் சி நிறைந்துள்ளன. முருங்கை கீரை எதனுடனும் பயன்படுத்தலாம். இவற்றை கிளைகளை நீக்கி சுத்தமாக்கி பயன்படுத்த வேண்டும். தோசை மாவு, ஆம்லெட் மற்றும் சூப்களில் இதை பயன்படுத்தலாம். பொடியாக்கி காலை உணவுடனும் பயன்படுத்தலாம். முருங்கை கீரை தவிர வேறு பல இந்திய கீரை ரகங்களும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்தியர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட சில பொருட்களை சூப்பர் உணவு துறை அண்மை காலங்களில் சேர்த்துக்கொண்டுள்ளது. பெங்களூருவைச்சேர்ந்த ஊட்ட்சத்து
வல்லுனரான ஷாலின் மகாலிங்கம், மஞ்சளின் அதிகரிக்கும் செல்வாக்கை சுட்டிக்காட்டுக்கிறார். “மஞ்சளை சமையல், பால் மற்றும் சருமத்தில் என நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இதன் குணமாக்கும் ஆற்றலை மேற்குலகம் புரிந்து கொள்ளத்துவங்கியிருக்கிறது” என்கிறார் அவர். தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் மேற்குலகை ஈர்க்கத்துவங்கியுள்ளன. சிறுவயதில் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஆயில் மசாஜ் மேற்கில் இப்போது பிரபலமாக உள்ளது. நெய்யும் இதே போல அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.நாம் பேசிய இரண்டு ஊட்டச்சத்து வல்லுனர்களுமே, நம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக விளங்கும் ஒற்றை உணவு இல்லை என்கிறனர். நம்முடைய உடலுக்கு பழக்கமான உணவுகளை அளவுடன் உண்பது தான் முக்கியம். “நம்முடைய பாக்கெட்டிற்கும், உடலுக்கும் ஏற்றதா என்று பார்க்காமலேயே மேற்குலகை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறோம். விஞ்ஞான ஆய்வுகளை விட வேகமான இணையமும், சமூக ஊடகமும் உணவு செய்திகளை வெளியிடுகின்றன. இது குழப்பத்தை அதிகமாக்குகிறது” என்கிறார் ஷீலா கிருஷ்ணசாமி. நம்முடைய நாட்டு தகவல்களைவிட மேற்கத்திய ஆய்வு முடிவுகள் நமக்கு எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்கிறார் கினி. “நம்முடைய பாட்டி சொல்லும் கதைகள் மற்றும் உணவு குறிப்புகளை நாம் அதிகம் நம்பவேண்டும். ஏனெனில் அவை நம் உடலுக்கு ஏற்றவை.” இந்திய உணவு பற்றிய ஆய்வு முடிவுகள் கிடைக்கவில்லை எனில் ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமாக உள்ள உணவு வகைகளை கவனிக்கவும். பெரும்பாலான இந்திய உணவுகள் சமமானவை என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் உணவில் பருப்புகள் புரத சத்து அளிக்கின்றன, சிறு தானியங்கள் நார்ச்சத்து அளிக்கின்றன. கீரைகள் இரும்புச்சத்து தருகின்றன், காய்கறிகள் வைட்டமின்களை அளிக்கின்றன. சப்ஜாவிதை நார்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளது. எனினும் உள்ளூர் வல்லுனர்கள் உற்சாகம் கொள்வது சிறுதானியங்கள் குறித்து தான். இந்தியாவில் கர்நாடகத்தில் தான் சிறுதானியம் அதிகம் உற்பத்தியாகிறது., “சமமான உணவுக்கு தேவையான எல்லாம் சிறுதானியங்களில் உள்ளன. கேச்வரகு, குதிரைவாலி, திணை உள்ளிட்டவை இதில் அடங்கும்” என்கிறார் பெங்களூருவைச்சேர்ந்த பிட்னஸ் வல்லுனர் வனிதா அசோக்.
No comments:
Post a Comment