immunity-rasam நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 5 September 2021

immunity-rasam நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்

femina

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்



குழந்தைகளுக்கு வயிற்றில் உருவாகும் பூச்சியை அழிக்கும் மருந்து. பெரியவர்களக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பானம். எனவே, வேப்பம்பூ ரசம் செய்து அனைவரும் சாப்பிடலாம். செய்முறை பற்றி கீழே கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு
புளி – ஒரு நெல்லிக் காய் அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு. கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து. கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பயன்கள்: 
வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

No comments:

Post a Comment