தானியத்தின் புது தோற்றம்
அமெரிக்க முன்னாள் அதிபர், ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை போன்றோர் விரும்பும் கீன்வாவில் ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த அற்புதமான உணவை உங்கள் உணவு மேசைக்குக் கொண்டு வருகிறார்- பிராச்சி ராதுரி மிஸ்ரா
நீங்களே சமைக்கலாம்
நறுக்கப்பட்ட காய்கறிகளுடன் வேகவைத்த கீன்வாவை சேர்த்தால் எளிதான ஊட்டசத்துள்ள சிற்றுண்டி தயார். உப்புமா, கஞ்சியிலும் இதைச் சேர்க்கலாம். இதைப் பயன்படுத்தி பேன்கேக், பிரட், மஃபின்,
கிராகர்ஸ் போன்றவற்றை தயாரிக்கலாம். ஆனால், கோதுமை மாவுக்கு பதிலாக பயன்படுத்துவது சற்று செலவை அதிகரிக்கும். முளைகட்டியோ, சாண்டுவிச்களில் நிரப்பியோ சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு
வறுக்கப்பட்ட கீன்வா சாலட்
3/4 கப் கீன்வா
1 பெரிதாக நறுக்கப்பட்ட கேரட்
1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
1/4 கப் வெட்டப்பட்ட பார்ஸ்லே இலை, சிலான்¢ட்ரோ இலை
2 நறுக்கப்பட்ட வெங்காயத் தாள்
2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
1 1/2 மே.கரண்டி சோயா சாஸ்
2 பல் நசுக்கப்பட்ட லவங்கம்
1 தேக்கரண்டி டாபாஸ்கோ
தினையை வானலியில் போட்டு வறுக்கவும். 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 15 நிமிடங்கள் வேகவைத்து,
பிறகு 10 நிமிடங்களுக்கு ஆறவிடவும். கேரட், குடை மிளகாய், பார்ஸ்லே, வெங்காயத் தாளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கலக்கவும். கீன்வாவை சேர்க்கவும். எலுமிச்சைசாறு, சோயா சாஸ், பூண்டு, டாபாஸ்கோவை சாலட் உடன் கலக்கவும்.
No comments:
Post a Comment