முடி உதிர்வதைத் தடுக்க...
*மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை மூக்கால் கிலோ, அவுரி இலை மூக்கால் கிலோ, செம்பருத்தி பூ 75. மருதாணி இலை முக்கால் கிலோ, மல்லிகை அல்லது முல்லைப்பூ 1 கிலோ, 15 எலுமிச்சம்பழம், பச்சைக் கற்பூரம் 5 கிராம், நல்லெண்ணெய் ஒரு கிலோ, பசும்பால் 1 கிலோ.
இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து நல்லெண்ணெயில்
கலக்க வேண்டும். செம்பருத்திப் பூவையும் இடித்து எண்ணெயில் கலந்து பால் கலந்து மூன்று நாள்கள் வெயிலில் வைக்க வேண்டும். மூன்று நாள்களுக்குப் பிறகு வாசனைக்காக மல்லிகைப் பூவை இக்கலவையில் போட்டு மூடி வைத்து நாள்காம் நாள் இக்கலவையை
அடுப்பிலேற்றி மூன்று - மணி நேரம் காய்ச்சு வேண்டும்.
கொதிக்கும் எண்ணெயில் எலுமிச்சம் பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டு மிதமான சூட்டில் ஒரு மணி நேரம் காய்ச்சி இறக்கி பச்சைக் கற்பூரம் போட வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்த வர தலைமுடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும். கண்கள் குளிச்ச்சி பெறும். நல்ல தூக்கம் வரும். 25 வயதிற்குள் உள்ளவர்கள் பயன்படுத்த இளநரை மறையும்,
No comments:
Post a Comment