almond-resin-gives-relief-from-heat-related-diseases சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 21 August 2021

almond-resin-gives-relief-from-heat-related-diseases சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி...?

 Coriander rice

சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி...?


தேவையான பொருட்கள்:

 

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 1 1/2 கப்

எண்ணெய் - தேவைக்கு

அரிசி - 1 1/2 கப்

 

அரைக்க தேவையான் பொருட்கள்:

 

கொத்தமல்லி தழை - 1 கட்டு

பூண்டு - 5 பல்

உப்பு - ருசிக்கேற்ப

பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப


செய்முறை:

 

* அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

 

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

 

* வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன்  சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கொத்தமல்லி சாதம் தயார். 


No comments:

Post a Comment