குதிகால் வெடிப்பு ரொம்ப வலிக்குதா? இதோ அதை சரிசெய்யும் சில வழிகள்!
வெளியிடங்களுக்கு செல்லும் போது கால்களுக்கு அணிந்துள்ள காலணிகளை கழற்றி விட தர்ம சங்கடமாக உள்ளதா? நம்மில் பெரும்பாலானோர் நமது முகத்திற்கு கொடுக்கும் அளவில் பாதங்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. ஆனால் நமது உடலிலேயே நமது பாதங்களில் தான் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே தான் பாதங்கள் போதுமான எண்ணெய் பசையில்லாமல், விரைவில்
வறட்சி அடைகின்றன. பாதங்களில் வறட்சி அதிகரித்தால், அது குதிகால் வெடிப்பிற்கு வழிவகுக்கும்.
இது தவிர உடல் பருமன், பொருத்தமற்ற காலணிகளை அணிவது, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, சரும வறட்சி மற்றும் சீரான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது போன்றவற்றாலும் குதிகால் வெடிப்புகள் ஏற்படும். ஆனால் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பல பொருட்கள் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்குமளவில் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. கீழே குதிகால் வெடிப்புகளைப் போக்க உதவும் சில சமையலறைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6
, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வாழைப்பழம் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இதைக் கொண்டு பாதங்களைப் பராமரித்தால், பாதங்கள் வறட்சியின்றி ஈரப்பதத்துடன் இருக்கும்.
வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது எப்படி?
நன்கு கனிந்த 2 வாழைப்பழங்களை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். கனியாத பழங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அதில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் அமிலம் இருக்காது. மசித்த வாழைப்பழத்தை பாதங்களில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்க
ு குறைந்தது 2 முறை படுப்பதற்கு முன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தேன்
தேன் ஒரு நேச்சுரல் ஆன்டி-செப்டிக் பொருளாக கருதப்படுகிறது. எனவே இது குதிகால் வெடிப்புகளை சரிசெய்யும். அதோடு, இதில் சருமத்தில் ஈரப்பசை அளிக்கும் பண்புள்ளதால், சரும வறட்சி தடுக்கப்படும். கூடுதலாக, தேன் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கவும் உதவுகிறது.
தேனை எப்படி பயன்படுத்துவது?
ஒரு கப் தேனை ஒரு வாளியில் உள்ள வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவாறு தேய்க்க வேண்டும். பின் பாதங்களை சுத்தமான நீரில் கழுவி, பாதங்களை உலர்த்த வேண்டும். அதன் பின் பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி சில வாரங்கள் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
No comments:
Post a Comment